15.9.06

உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து! How to get traffic to blogs?

ஒரு சிறந்த, இணையப்பயனாளர்கள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய, வாசிதது ரசிக்கிற பிலாகை உண்டாக்கி விட்டீர்கள். நீங்கள் எழுதிய அந்த பிலாகில் A to Z அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. இப்பொழுது நீங்கள் எழுதிய பிலாகிற்கு மற்றவர்கள் வந்து வாசிக்க வேண்டும். இதையே Traffic என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

உலகின் தலைசிறந்த இணையப்பக்கமாக இருந்தாலும் அதற்கு மக்கள் வரத்து இல்லையென்றால் அந்த இணையதளம் வீணே!

ஏனெனில், மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் இணையதளத்தை (பிலாகும், இணையதளம் போன்றது தான்!) பயன்படுத்த இயலும். பயன்பாடு இருந்தால் தான் உங்களுக்கு பணம் வரும்.
இணையதளத்திற்கு டிராப்பிக்கை, இவ்வாறு ஒப்பிடலாம். நான் ஒரு மளிகைக்கடை ஒன்றை புதிதாக தொடங்குகிறேன். சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற மளிகைக் கடைப்போன்று இல்லாமல், பொருட்கள் தரமானதாகவும், சரியான அளவிலும், வாடிக்கையாளரை நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து நியாயமான விலையில் இருக்கும் படி அமைத்து விட்டேன். இப்படி நான் ஏற்பாடு செய்திருந்தும், வாடிக்கையாளர் என் கடைக்கு வரவில்லை.

ஏன்?

இந்தக் கேள்விக்கான பதில் மிகமிக எளிது. எனது கடையைப் பற்றி நான் விளம்பரம் செய்யவில்லை என்பது தான்! விளம்பரம் என்பதை மிகவும் தெளிவாக கூற வேண்டுமானால், மற்றவர்களுக்கு உங்கள் பொருட்களை, கூறுவது தான். கடைக்கு விளம்பரம் கொடுத்து மக்களை கடைக்கு வரவழைத்து, அவர்களை கவரும் படி கடை வியாபாரம் அமைந்தால், பின்பு அவர்கள் வாடிக்கையாக கடைக்கு வரச்செய்து வாடிக்கையாளர்களாக பெறமுடியும். இதிலிருந்து ஒன்று புரியும். உங்கள் கடைக்கு மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே, பணம் கிடைக்கும். இந்த கருத்து இணையதளத்தை வைத்து வியாபாரம் செய்வதற்கும், அப்படியே பொருந்தும்! எனவே சில அப்ளியேட் ப்ரோகிராம்களில் சேர்ந்து, அப்ளியேட் URL ஐ உங்கள் பிலாகுகளில் சேர்த்தால் மட்டும் போதாது. உங்கள் இணைய தளத்திற்கோ, பிலாகிற்கு, மக்கள் வரத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், பிலாகும், ஒரு இணையதளத்திற்கு சமம். மக்கள் வரத்தை (Traffic) ஏற்படுத்த இரண்டு வழிகள் உண்டு.

ஒன்று, சிறிது பணம் செலவழித்து பெறலாம். இரண்டாவது வழி முற்றிலும் இலவசமானது.

இலவசமாக ஏனோ கிடைப்பதால், இதைப் பயன்படுத்தினால் பயன் இன்றும் கிடைக்காது என்று நினைத்து விடாதீர்கள். பணம் செலவழித்து மக்கள் வரத்தை பெறுவதைப் பற்றி பின்பு கூறுகிறேன்.
இப்பொழுது இலவசமாக மக்கள் வரத்தை தரக்கூடிய சிறப்பு அம்சங்கள் உடைய வெப்தளங்களைப் பற்றி பார்ப்போம்.

ஒரு Idea!

உங்களுக்கு Jack pot! (பண மழை) அடிக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்-ஐ(affiliate URL) இந்த தளங்களில் தரலாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்.யிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். அவர்கள் அந்த இணையத்தளத்தில் வாங்கினால், பணம் உங்கள் பாக்கெட்டிற்கு வரும். நீங்கள் வேறெதும் செய்ய வேண்டாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல். ஐ இங்கு தரவும், பணம் தானாக வரும்.

Instant Buzz
உங்கள் இணையதள யு.ஆர்.ல்-ஐ தந்த சில நிமிடங்களில் உங்கள் இணையதளத்திற்கு அலைக்கடல்லென மக்கள் வரத்து இருக்கும். Instant buzz என்று பெயருக்கு ஏற்ப, உடனடியாக, உங்கள் வெப்தளத்தைப் பற்றி செய்தியை புரளி போன்று பரவ செய்து விடும். இலவச மக்கள் வரத்து சேவையைத் தரும் வெப்தளங்களில் முதன்மையானது. இவர்கள் தளத்தில் சென்று toll bar ஐ download செய்து கொள்ளவும். பின்பு எப்போதும் போல பிரவுஸ் செய்யவும். உங்கள் தளத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க பாயிண்ட்ஸ் தேவை. நீங்கள் பார்வையிடும் எந்த தளத்திற்கும் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

Traffic swarm
தேனீக்கள் கூட்டம் போல மக்கள் வரத்து கிடைக்கும். இன்டர்நெட்டில் பிரபல மக்கள்வரத்தை தரும் சேவையைத் தருகிறது. பத்து URL வரை சேர்க்கலாம். மற்றவர்கள் வெப்சைட்டை பார்வையிட்டால் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

Link referral
ஒரு account ஐ தொடங்கி, உங்கள் வெப்தளத்தை தரவும். உங்கள் வெப்தளத்திற்க வேறு வெப் தளங்களில் இருந்து இணைப்புகள் கிடைக்கும். மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் இணையதளத்திற்கு இணைப்பு (link) கிடைத்தால், தேடு பொறிகளில் உங்கள் வெப்சைட்டின் மதிப்பு கூடி, அவைகளில் இருந்து மக்கள் வரத்து கிடைக்கும்.

Free viral
நுண்கிருமிகளான வைரஸ், பாக்டீரியாக்கள் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கில் பெருகுகின்றன. அதே போல் உங்கள் வெப்சைட்டிற்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான மக்களை கொண்டு வர செய்ய முடியும். இது முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இலவச சேவையாகும்.

10.9.06

முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை! How to make money without investment?

இன்டர்நெட்டில் மாதம் சுமார் ரூ.45,ooo/-சம்பாதிக்கலாம் என்றால் வியப்பாக உள்ளதா? வியப்படைய வேண்டாம்! உண்மையாக சற்று உழைத்தால் இது சாத்தியமாகும்.

வெகுவாக வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாடு, வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்யுமாறு அமைந்து விட்டது. இந்த இன்டர்நெட்டில், இப்பொழுது எல்லாம் மவுசை ஒரு தட்டு தட்டினால், உங்கள் போன், மின்சார பில், இன்சூரன்ஸ் பிரிமியம் கூட கட்ட முடியும். ஏன், உங்கள் பிரியமானவர்களுக்கு அன்பளிப்பு ஒன்றை பல நூறு பொருட்களிரடயே தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அனுப்ப அனுப்பக் கூட முடியும்! இதற்கெல்லாம் காரணம் இன்டர்நெட் வழங்கும் எளிய பாதுகாப்பான பயன்பாட்டு அம்சங்கள் தான். இந்தக் காரணங்களால் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பணம் சம்பாதிக்கும் வழியும் ஒரு பக்கம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

சரி, இவைகயெல்லாம் சரி, விஷயத்துக்கு வாருங்கள் என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.

இணையத்தில் சம்பாதிக்கும் வழிகளை பிரதானமாக இரண்டு வகைப்படுத்தலாம்.

ஒன்று - உங்கள் பொருட்களை வெப்சைட்டில் வெளியிட்டு வியாபாரம் செய்யலாம் (எடுத்துக்காட்டுக்கு உங்களுடைய சாப்ட்வேர், புத்தகம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) .

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கென்று கடை (வெப்சைட்) ஒன்றை தொடங்கி அதில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சமம். உங்கள் பொருட்களை இன்டர்நெட்டில் (உங்கள் வெப்சைட்டில்) விற்பனை செய்வதில் சிறப்பு பயன்கள் உண்டு. உங்கள் வெப்சைட், ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், வாரத்திற்கு 7 நாட்களும் வேலை செய்யும். விடுமுறை என்பதே கிடையாது. எனவே யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் வெப்சைட்டில் இருந்து பொருட்களை வாங்க முடியும். மேலும் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம், எந்த நாட்டினரும், நீங்கள் விற்கும் பொருட்களை பெற முடியும். உங்கள் பொருட்களை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல இயலும்! உங்கள் வாடிக்கையாளர்களும் உலகளாவிய அளவில் இருப்பார்கள்.

இரண்டு - மற்றவர்களின் பொருட்களை நீங்கள் விற்கலாம்.
நீங்கள் விற்பதற்கு உங்களுடைய சொந்த பொருட்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் மற்றவர்களுடைய பொருட்களை விற்றுத் தரலாம். இதையே அப்பிளியேட் ப்ரோகிராம்ஸ் (Affiliate programs) என்று கூறுகிறார்கள். முதலில் நான் கூறிய வழிமுறையில், உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்குதல் என்பதற்கு உங்கள் வெப்சைட்டுக்கு பெயர் பதித்தல்(Domain name), வெப்சைட் உருவாக்குதல் (Web site designing), உங்கள் வெப்சைட்டை ஒரு சர்வரில் சேகரித்தல் (website hosting), உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவதற்கு வசதி என இவை அனைத்தையும் நிறுவ வேண்டும்.

இவையனைத்தையும் செய்வதற்கு நேரமும், பணமும் தேவை.

ஆனால் இரண்டாவது வழிமுறையானது, மிகவும் எளிதானது.

முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை என்றால் இந்த அப்பிளியேட் ப்ரோகிராமை (Affiliate program) கூறலாம்.
சரி, இந்த அப்ளியேட் ப்ரோகிராம் எவ்வாறு செயல்படுகிறது, உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் அப்ளியேட் ப்ரோகிராம் என்றவுடனே, இது ஏனோ சாப்ட்வேர் அல்லது கம்ப்பூயூட்டர் ப்ரோகிராம் (Computer programme) என்று நினைத்து விட வேண்டாம். திட்டம் என்பதையே, நான் இங்கு "program" என குறிப்பிட்டுள்ளேன். ஆனால் திட்டம் என்ற வார்த்தையின் சரியான ஆங்கிலச் சொல் programme என்பதே ஆகும். அமெரிக்க ஆங்கிலத்தில் programme என்ற சொல்லை பயன்படுத்தாமல் program என்றே பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட்டில் அமெரிக்க ஆங்கிலமே அதிகளவில் ஆதிக்கம் செய்கிறது.

அப்பிளியேட் ப்ரோகிராமின் (Affiliate program) செயல்பாடுகள் பற்றி பார்ப்போம். (How do affiliate programs work for you?)

முன்பு நான் குறிப்பிட்டிருந்தபடி மற்றவர்களுடைய பொருட்களை விற்று தருவதை அப்ளியேட் ப்ரோகிராம் என்று சுருக்கமாக கூறலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு குறிப்பிட்ட வெட்சைட்டில், உடல் எடையை எப்படி குறைக்க என்று ஒரு e-book ஐ விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது இந்த e-book விற்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அவர்கள் வெப்சைட்டில் வைத்தே விற்கலாம். இரண்டாவது அப்பிளியேட் ப்ரோகிராம் ஐ ஏற்படுத்தி விற்கலாம். சரி இப்போதைக்கு இதைப்பற்றி பேசுவதை தற்சமயம் நிறுத்திக் கொள்வோம்.

நீங்கள் ஒரு அப்பிளியேட்(Affiliate) ஆக சேர விரும்பிய அந்த வெப்சைட்டில் அப்பிளியேட் ப்ரோகிராமின் வாய்ப்பைத் தர வேண்டும். உங்களைப் பற்றிய சில தகவல்களை (பெயர், இ-மெயில், விலாசம்) ஆகியவற்றை check அனுப்புவதற்கு கேட்பார்கள். இவற்றை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும், நீங்கள் அப்பிளியேட் ஆகி விடலாம். ஆனால் இதுவே முதற்படி.

அப்ளியேட் ப்ரோகிராம் மூலம் நீங்கள் எப்படி சம்பாதிக்கலாம்? நீங்கள் ஒரு அப்பிளியேட் ஆன பிறகு, உங்களுக்குகென ஒரு பிரத்யோக code ஒன்று வழங்கப்படும். கூடவே உங்கள் அப்பிளியேட் code-ஐ உடைய அப்பிளியேட் URL கிடைக்கும். இதையே அப்பியேட்டின் இணையப்பக்கம் எனப்படும்.

உங்களுடைய வேலை இப்போது என்ன?

உங்கள் வேலை மிகவும் சுலபம். உங்கள் அப்பிளியேட் URL- ஐ ஒரு Internet பயனாளர் கிளிக் செய்யும் போது உங்களுடைய அப்பிளியேட் URL தெரியும். அந்த இணையப்பக்கத்தில், அந்த பயனாளர் வாங்கினாலோ, புதியதாக signup எதுவும் செய்தாலோ, உங்களுக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகை கிடைக்கும். பெரும்பாலான அப்லியேட் புரோம்கிராம்ஸ் 50%முதல் 75% வரை கமிஷன் தருகிறார்கள். இது ஒவ்வொரு அப்லியேட் ப்ரோகிராமுக்கும் மாறுபடும்.

பணவேட்டையை எப்படி தொடங்குவது? (How to make money?)

உங்களது அப்பிளியேட் URL–ஐ இணைய பயனாளரை (Internet user) சென்றடையச் செய்ய வேண்டும் (அதை அவர்கள் கிளிக் செய்ய வேண்டும்). யாருமே அப்பிளியேட் URL ஐ பார்த்தவுடனே அதை கிளிக் செய்ய மாட்டார்கள்.
இணைய பயனாளர்கள் எங்கேயெல்லாம் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், ஒரு பொருளைப் பற்றி அறிய எங்கே செல்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலனோர் Blogs என்று சொல்லப்படுகிற personal டைரியை வாசிப்பதில் ஆர்வம் கொள்கின்றனர். இதென்னடா? மற்றவரிகளின் டைரியை வாசிப்பது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

Blog ல் உங்களது எண்ணங்களை, ஆசைகளை, பிரியங்கள், வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கதைகள், அறிவியல், படித்தது, பார்த்தது, கலை, சரித்திரம் கேட்பது முதல் முகர்ந்தது தொட்டர், சுவைத்தது என்று எதையும் எழுதலாம். இதை நினைத்துப் பாருங்கள் உங்கள் எண்ணங்களை உலகமே வாசிக்கக் கூடிய சக்தி வாய்ந்த மீடியாவாக Blogs விளங்குவதை! இணைய பயனாளர்களில் blog readers அளவு கனிசமாக அதிக அளவில் உள்ளது. Blog readers உங்களுடைய பிலாகுகளை அதிகமாக மதிக்கிறார்கள்.

மற்றவர்கள் ஏன் உங்கள் பிலாகுகளை வாசிக்கிறார்கள் தெரியுமா?

உங்களுடைய கருத்துக்களை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். நீங்கள் ஒரு காரியத்தையோ, பொருளைப்பற்றியோ கூறும் போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள். அதை எப்படி பயன்படுத்தி கொண்டீர்கள், என்பதை அறிந்து கொள்ள வாசிக்கிறார்கள்.

இந்த blogகுகளை பணம் சம்பாதிக்க எப்படி பயன்படுத்துவது?

Blog குகளுக்கு நல்ல மார்க்கெட்டிங்(marketing) வலிமை உண்டு.
சந்தையில் விற்பனையில் Blog-களின் வெற்றியை அறிய விரும்புகிறீர்களா?
செல்போன் நிறுவனங்கள் ஒரு புதிய மார்க்கெட்டிங் யுக்தியை பயன்படுத்துகின்றன.

இந்த நிறுவனங்கள், செல்போன்களைப் பற்றி எழுதும் blog writers(blog எழுதுவோரிடம்), புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தங்கள் செல்போன்களை இலவசமாக வழங்குவா். இந்த blog எழுத்தாளர்கள், செல்போன்களை பயன்படுத்தி அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் முதலியவற்றை தங்கள் blog களில் எழுதுபவர்கள். இவர்கள் ஒவ்வொரு செல்போனையும் பயன்படுத்தி பார்த்து அதில் உள்ள நிறைவு, குறைகளை கூறுவதால், மக்கள் இவர்களின் blog குகளை வாசித்து பார்த்து செல்போன் வாங்கும் அளவிற்கு  இ ன்று நிலை மாறிவிட்டது. சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய செல் போன்கள் இவர்கள் கைகளில் கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள்? அதைப் பயன்படுத்தி “எழுதி தள்ளிவிட்டார்கள்". இந்த நிறுவனங்களுக்கும் கூடுதலாக விற்பனை கிடைத்தது. இன்றைய நவீன யுகத்தில் பிலாக்குகள் ஒரு புதிய மார்க்கெட்டிங் tool ஆக மாறிவிட்டது.

இதுவரை நான் கூறிய வழிமுறைகள் வியப்பாக உள்ளதா? இனி நான் கூறப்போகும் பணம் சம்பாதிக்கும் வழிமுறை இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தப் போகிறது!!

Blog குகளை வைத்து பணம் சம்பாதிக்க இதோ எளிய வழிகள். (How to make money with your blogs?)

நான் கூறியிருக்கும் ஒவ்வொரு முறையையும் (steps) செயல்படுத்த வேண்டும். “கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் வரும்” என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் இங்கு கூற போகும் வழிமுறைகளை அப்படியே பின்பற்றினால் உங்கள் blog குகளில் இருந்து பணம்(money!) பிய்த்துக் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1. உங்களுக்கென ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளுங்கள் http://www.blogger.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கு என்று இதுபோல் ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளவும். blog ஐ உண்டாக்குவது மிகவும் எளிது.


உங்களுடைய user name, password ஐ தேர்வு செய்து தேவையான இடத்தில் type செய்யுங்கள். user name, password யும் எழுதிக் கொள்ளவும். அடுத்தது உங்கள் blog யின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.

2. உங்கள் ப்ளாகிற்கு தேவையான template ஐ தேர்ந்தெடுக்கவும். Template என்பது ready made ஆக இருக்கும் ப்ளாக் டிசையின் ஆகும். உங்களுக்குப் பிடித்த, உங்கள் ப்ளாக் பொருளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவும்.

3. Blog title என்ற இடத்தில், உங்கள் blog எதைப்பற்றியது என சுருக்கமாக, முக்கியமான தகவலை டைப் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்கள் blog create ஆகிவிட்டது.

4. Create a new post ஐ கிளிக் செய்து உங்கள் புதிய blog ஐ தொடங்கவும். Blog headline என்பதில் நீங்கள் எழுதப் போகும் கட்டுரையின் தலைப்பைத் தரலாம்.

5. பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் கட்டுரையை டைப் செய்து publish பொத்தானை அழுத்தினால் போதும், உங்கள் blog publish ஆகியிருக்கும். நீங்கள் உங்கள் blog ஐ தமிழில் உருவாக்க நினைத்தால், MS - WORD போன்ற text editor களில் டைப் செய்து அதை காப்பி (copy) செய்து http://www.suratha.com/unicode.htm வந்து paste செய்யவும் (This converts your text into unicode and blogger supports only unicode! and you can easily paste the text from there, straight away to your blog).

6. மற்றவர்களுடைய பொருட்களை விற்று தருவதுதான் affiliate program என்று கூறி இருந்தேன். நீங்கள் விற்று தந்தால் உங்களுக்கு 50% முதல் 75% கமிசன் கிடைக்கும். எப்படி affiliate program களில் சேருவது என்று முன்பு கூறியுள்ளேன். அதை வாசியுங்கள். Clickbank என்பது இன்டர்நெட்டின் மிகப்பெரிய மற்றும் சிறப்பான affiliate program வாய்ப்பை தருகிறார்கள். Clickbank என்பது பொருட்களை விற்பதற்கும் , வாங்குவதற்கும் ஏற்ற இடம். உங்களுக்கென ஒரு clickbank account ஐ http://www.clickbank.com/ என்ற இணையதள பக்கத்தில் தொடங்கவும். இது முற்றிலும் இலவசம்! உங்களுடைய பெயர் விலாசம், இ-மெயில் அட்ரஸ் ஆகியவற்றை தர வேண்டும். உங்கள் கமிஷன் தொகையை check ஆக நீங்கள் தரும் முகவரிக்கு அனுப்புவார்கள். உங்கள் clickbank nick name, password ஐ எழுதி வைத்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது http://www.clickbank.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் “Market place” என்ற Tab ஐ click செய்யவும். அதில் products வெவ்வேறாக பிரித்து தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டுக்கு பொருட்களை Health(உடல்நலம்) Bussiness(வியாபாரம்) women's products(பெண்களுக்கான பொருட்கள்) என்று இன்னும் பல தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கும். இந்த தலைப்புகளை கிளிக் செய்தால், அந்தந்த தலைப்புகளில் உள்ள products வரிசையாக பட்டியலிடப்பட்டு இருக்கும். வரிசைப்படுத்தப்பட்டு உள்ள ஒவ்வொரு தலைப்பின் அருகிலும், அந்த பொருட்களை விற்று தந்தால் எவ்வளவு சதவீதம் கமிஷன் என்று இவ்வாறாக இருக்கும் - (75%) அதை கிளிக் செய்யவும். புதியதாக open ஆகும் window வில் உங்கள் clickbank nick name (நீங்கள் clickbank affiliate ஆக பதிவு செய்த பெயரை தரவம்). Submit பட்டனை கிளிக் செய்யவும். இப்போது clickbank hop link ஒன்று வரும். அதைக் காப்பி செய்து கொள்ளவும்.

8. காப்பி செய்த hop link ஐ, உங்கள் blog யில் paste செய்யவும்.நீங்கள் உடல் எடையை எப்படி குறைப்பது என்று ஒரு blog எழுதினால், உடல் எடையைக் குறைக்கக் கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுத்து hop link ஐ உங்கள் blog யில் paste செய்யவும்.இந்த hop link(your affiliate link) ஐ சரியான இடத்தில் paste செய்யவும்

9. இப்பொழுது உங்கள் blog சரியாக அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் பயனாளர் ஒருவர் உங்கள் affiliate link ஐ கிளிக் செய்தால், அந்த web page open ஆகும். பயனாளர் அந்த web pages யில் பொருளை வாங்கினால், உங்கள் account யில் கமிசன் வரும்


இந்த கட்டுரையைப்பற்றிய உங்கள் கருத்துக்களை comments என்ற tab ஐ கிளிக் செய்து தெரியப்படுத்தினால், உங்கள் blog யிற்கு, இங்கிருந்து ஒரு link கிடைக்கும்.

எனது அடுத்த post யில் நீங்கள் ஏற்படுத்திய blog யிற்கு எப்படி மக்களை வரவழைத்து (Traffic to your blogs), உங்கள் blog ஐ பயன்படுத்த செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். வாழ்த்துக்கள்!!