இன்றைக்கு இணையத்தில் உள்ள பெரும் பான்மையான தமிழ் பக்கங்கள், வலைப்பதிவு பக்கங்களாகத்தான் இருக்கின்றன. வலைப்பதிவுகளால் தான் இன்று சொல்லிக் கொள்ளும் அளவு ”தமிழ்” நடமாட்டம் இணையத்தில் உள்ளது. புதிய வலைப்பதிவாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது, தமிழில் வலைப்பதிவை போடுவது(எழுதுவது) தான்.
தமிழில் மைக்ரோ சாப்ட் வேர்ட்டில் தட்டச்சு செய்தது, அதை காப்பி செய்து பதிவிடலாம் என முடிவு செய்தால், தமிழ் எழுத்துக்கள் இனம்புரியாத எழுத்தகளாகி விடும். இப்படித்தான் என் கதையும் ஆரம்பித்தது. பின்பு தான் எனக்கு தெரியவந்தது தமிழ் எழுத்துக்களை யுனிக்கோடு எழுத்துக்களாக மாற்றி பின்பு பேஸ்ட் செய்ய வேண்டுமென்று! எங்கு போவது இந்த மாற்றிகளுக்கு? தேடிப்பிடித்ததில், சில இலவச மென்பொருள்கள் கிடைத்தன். அதில் சில வகைகள் முழு பயன்பாட்டை பெற, விண்டோ்ஸ் அசல் சிடியைக் கேட்டன! சிலவன டரயல் பிரியடு முடிநவுடன் இயங்க மறுத்தன!
சில நாட்களுக்கு முன்பு, NHM writer என்ற அருமையான இலவச மென்பொருளைக் கண்டேன். மிக மிக அருமையான மென்பொருள். காசுக் கொடுத்து வாங்கும் தமிழ் எழுத்து பொரிகளைக் காட்டிலும் பன்மடங்கு பயன்பாடு இருக்கிறது. நேராக பிரவுசரில் டைப் செய்யலாம். பல பிரவுசர்கள் ஆதரவு, மிக குறைந்ந பையில் அளவு, எளிமையான பயனாளர் வடிவமைப்பு, நன்கு வடிவமைக்கப்பட்ட உதவிப் பக்கங்கள் என அசத்துகிறது. இதை 100% பரிந்துரைக்கலாம். இன்றே பதிவிறக்கம் செய்து உபயோகிப்பீர்! முகவரி: http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
இன்டர்நெட் தரும் பணம்!
இணையத்தின் மூலம் சுலபமாக பணம் சம்பதிக்கலாம் வாங்க!
23.10.08
17.10.08
புதிய பதிவுகளை இனி உங்கள் போனில் வாசிக்கலாம்
வாசகர்களுக்கு ஒர் இனிய செய்தி! இப்பொழுது "இன்டர்நெட் தரும் பணம்" - தளத்தில் புதிதாக சேர்க்கப்படும் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபையில் போனில் வாசிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது, கூகுள் SMS Channelனில் உங்கள் மொபையில் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது தான்! இதோ அதற்க்கான லிங்க்: http://labs.google.co.in/smschannels/subscribe/Tamil-Tutor
Subscribe to:
Posts (Atom)