20.11.13

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பணம்!

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரம், முன்பு எப்போதும் இல்லாத அளவு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய வர்த்த உலகின் ராஜா வாடிக்கையாளர் தான்! எந்த வெற்றிகரமான நிறுவனமும் வாடிக்கையாளர் விருப்பங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்க்கு ஏற்றால் போல பொருட்கள் வாடிக்கையாளர்களை சேரும் படி பார்த்துக் கொள்ளுகின்றனர். வெற்றியும் கொள்கின்றனர்.

ஒரு பொருளை சந்தையில் வெளியிடுவதற்க்கு முன்பு "இந்த பொருள் யாரை கவரும் படி அமைக்கப்பட்டிருக்கிறது?", "சந்தையில் ஏற்க்கனவே உள்ள போட்டியாளர் சரக்கைவிட எப்படி சிறப்பாக உள்ளது?", "பொருளின் தரத்தை எப்படி உயர்த்துவது, அதே நேரம், விலையை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது?", "சந்தையில் எப்போழுது பொருளை அறிமுகப்படுத்த சரியான நேரம்?" என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்த பின்புதான் பொருளை வெளியிடுவார்கள். சரி, நிறுவனங்களின் இந்த கேள்விகளுக்கு யார் பதிலளிப்பது? என்ற கேள்வி எழுகிறதா? வாடிக்கையாளர்களைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவே இருக்கிறது "கருத்து கணிப்பு நிறுவனங்கள்".

இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
கருத்துக்கணிப்பு துறை வல்லுனர்களை வைத்து நிறுவனங்களுக்கு தேவையான தகவல்களை சேகரிக்கும் "கருத்துக் கணிப்புக்களை" நடத்துகின்றன. நிறைய நேரங்களில் நமக்கு தெரியாமல் நாம் இது மாதரி தகவல்களை தருகிறோம்! என்ன நான் செல்லுவதை நம்பவில்லையா? சலவை சோப்பு அல்லது குளியல் சோப்பு வாங்கும் போது அட்டையில்: "சோப்பு பிடித்திருக்கிறதா? உடனே சொல்லுங்க! இலவச எண்:12345" என்று போட்டிருப்பார்கள்! இந்த மாதிரிதான், வாடிக்கையாளர் விருப்பங்கள் நிறுவனங்களை சென்றடைகின்றன. ஆனால் இந்த வகையில் கிடைக்கும் தகவல்கள் மிககிக குறைவு! எனவேதான் வர்த்தக நிறுவனங்கள், "மூன்றாம் மனிதர்களான" கருத்து கணிப்பு நிறுவனங்களை சார்ந்து இருக்கின்றன.

கருத்து கணிப்பிற்க்கு பொருத்தமான தகவல்களை தரும் நபர்களிடம் கருத்துக் கணிப்பு பெரிய அளவில் நடக்கிறது.
எடுத்துக்காட்டிற்க்கு, ஒரு நிறுவனத்திற்க்கு இளம் ஆண்கள் (20 வயதிலிருந்து 35க்ககுள்) எந்த மாதிரி ஆடைகளை அணிய விரும்புகின்றனர் என அறிவிரும்புகின்றனர் என வைத்துக் கொள்ளுவோம். கருத்துக்கணிப்பிற்க்கு முன்பு பங்கேற்ப்பவர்கள் அனைவரும் இந்த கணிப்பில் பங்கேடுக்க தகுதியானவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுவார்கள்.

இது எப்படி செய்யப்படும்?

மிக எளிது! கணிப்புக்கு முன்பு இது போல சில கேள்விகள் கேட்க்கப்படும்.

உங்கள் பாலினம்: ஆணா? பெண்ணா?
வயது: 1) 20க்குள் 2) 20வது முதல் 35 வரை 3) 35 முதல் 55
முதலாம் கேள்விக்கு பெண் என்று கூறினால் கணிக்ப்பில் பங்கேற்க்க தகுதி இல்லை என வந்துவிடும்! இது போல் எண்ணற்ற கருத்துக் கணிப்புகள் நடக்கிறது! இதனால் நமக்கு ஒரு நன்மையும் இருக்கிறது! தொடர்ந்நு வாசியுங்கள்!

சரி இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ப்பதால் என்ன கிடைக்கும்?
பணம் கிடைக்கும்! நீங்கள் பங்கேற்க்கும் ஒவ்வோரு கணிப்பிற்க்கும் பணம் கிடைக்கும்.

இந்த கணிப்பு நிறுவனங்களில் சேர பணம் எதுவும் கட்ட வேண்டுமா? இல்லை! முற்றிலும் இலவசம்.

எங்கு சென்று கருத்து கணிப்பில் பங்கேடுப்பது?
எங்கும் செல்ல வேண்டாம்! சைபர் கப்பையில் இணையத்தை பயன்படுத்தி பங்கேடுக்கலாம்.

புதிய கணிப்புகள் எப்படி கிடைக்கும்?
புதிய கணிப்புகள் வரும் போது மின்னஞ்சல் அல்லது செல் பேசியில் செய்தி வரும். விருப்பம் இருந்தால் மட்டும் பங்கேடுக்கலாம்.

பணம் எப்படி வந்து சேரும்?
உங்கள் பெயருக்கு காசோலையாக வரும்.

இணையத்தில் செலவிடும் நேரத்தில் பணம் பண்ண நல்ல வாய்ப்பு! கேட்க்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் விருப்பத்தை, கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் இருந்து தேர்ந்தேடுக்கவும். அவ்வளவுதான்! இன்றே சேர்ந்து சுலபமாக பணம் ஈட்டுவீர். மேலும் தகவல்களை நீங்களே தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணையதளங்களைக்கு சென்று பயனாளர் கணக்கை இலவசமாக தொடங்கவும்.

Harris Polls


No comments: