5.12.06

இணையத்தின் பண மொழி! Payment Sytems That Make More Money


இணையத்திற்கென்றே தனி பணமொழி உண்டு! "இதென்ன புதுசா பணமொழி?" என யோசிக்கிறீர்களா? இங்கு நான் பணமொழி என்று கூறியிருப்பது இணையத்திற்கே உரிய சில சொற்களாகும்.
இதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால், 'சம்பளம்' என்போமே அது தான்! "சம்பளம்" என்பது மிகமிக எளிய சொல். ஆனால் அதிலும் பல வகைகள் உண்டல்லவா? தினக்கூலி, வாரக்கூலி, செய்கூலி, மாதச்சம்பளம் என கூறுகிறோம். அதே போன்றுதான் இணையத்திலும் சம்பளத்தை (கூலி:-) பல வகைகளில் தருகிறார்கள்.

இணையத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது? அதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பது என்னுடைய முந்தைய பதிவுகளில் விளக்கி இருந்தேன். இணையத்தில் எப்படி சம்பாதிப்பது எப்படி என உங்களுக்கு தெரியும் என்றால், இந்த அறிமுக பத்திகளை விட்டுவிட்டு,கீழே உள்ள
செய்திக்கு வரவும்.

இணையத்தில் அப்லியேட் ப்ரோகிராம் மூலம் இன்று பெரும்பாலானோர் பணம் சம்பாதிக்கிறார்கள். இணையத்தில் பல்வேறு அப்லியேட் ப்ரோகிராம்கள், தங்கள் அப்லியேட்டுகளுக்கு பல்வேறு அடிப்படையில் பணம் தருகிறார்கள். (எ.கா) ஒரு அப்லியேட் ப்ரோம்கிராமில், உங்கள் வெப்சைட்டில் காட்டப்படும் விளம்பரங்களுக்கு பணம் கிடைக்கும், மற்றொன்றில் ஒரு பொருளை விற்று தந்தால் பணம் கிடைக்கும். எனவே இவைகள், செயலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு பார்ப்போம்.

இந்த வார்த்தைகளை நீங்கள் பரவலாக இணையத்தில் பார்த்திருப்பீர்கள்

CPC (Cost Per Click)
அப்லியேட் ப்ரோக்கிராம்களில் வெப்சைட்டில் காட்டப்பட்டிருக்கும் விளம்பரம் ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யப்படும் போது கிடைக்கும் பணத்தை குறிக்கிறது.

CTR (Click Through Rate)
விளம்பரம் ஒன்று, ஒவ்வொரு நூறு முறை காட்டப்படும் போது, எத்தனை முறை பயனாளரால் கிளிக் செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. (எ.கா.) CTR 10 % என்றால், விளம்பரம் நூறு முறை காட்டப்பட்டதில், 10 முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்.

Ad Impression
எத்தனை முறை ஒரு பக்கம் அல்லது விளம்பரம் காட்டப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

PPL (Pay Per Lead)
எத்தனை முறை பயனாளர் ஒருவரை விளம்பரதாரர் இணையப்பக்கத்திற்கு இட்டு சென்று உள்ளார்கள் என்ற அடிப்படையில் பணம் கிடைக்கும்.

Pay Per Sale
ஒவ்வொரு விற்பனைக்கும் கிடைக்கும் பணம்.

CPA (Cost Per Action)
அதவாது, இணையப்பயனாளர் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் கிடைக்கும். (எ.கா.) பக்கங்களை நிரப்புதல், பார்வையிடுதல்.

CPL (Cost Per Lead)
ஒரு விளம்பரத்தை ஒரு இணையப்பக்கத்தில் காட்ட ஆகும் செலவு, விளம்பரம் எத்தனை “Leads” ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து அமைகிறது.

CPM (Cost Per Thousand Impression)
ஒரு விளம்பரம் 1000 தடவை காட்டபட்ட பின் கிடைக்கும் கமிசனை குறிக்கும்.

Contextual Marketing
இதில் ஒரு பொருளை விற்க, அந்தப் பொருளைப்பற்றி கூறும் இணையப்பக்கத்தில் விளம்பரத்தை வைத்தல்.

எனவே மேற்கூறியுள்ள வகைகளில் அப்பிலியேட் ப்ரோக்கிராம்களை வரிசைப்படுத்தலாம்.

ஊசி என்ற வலைப்பதிவாளர் தன்னுடைய வலைப்பதிவில் அழகாக இந்த அடிப்படையில் பிரித்து வரிசைப்படுத்தி உள்ளார். அருமையான வேலை! சென்று பார்வையிடுங்கள். கவனம்: சில adult network யும் பட்டியலிடப்பட்டு இருக்கும், ஆனால் அருகில் எச்சரிக்கை செய்தியையும் கூறியிருக்கிறார்.

உங்கள் வலைப்பூக்களுக்கு ஏற்ப, அல்லது சுலபமாக பணம் கிடைக்கும் அப்பிலியேட் ப்ரோக்கிராமில் சேர்ந்து பணம் சம்பாதியுங்கள். வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் தரவும்! :-)