பொழுதுப் போக்கிற்காக எடுத்தப் படங்களை எப்படிப் விற்றுக், காசக்கலாம் என்று “புகைப்படங்களை மூலம் சம்பாதிப்பது எப்படி” என்ற முந்தைய பதிப்பில் பார்த்தோம்.
இந்தப் பதிப்பில் எந்த மாதிரியான புகைப்படங்களை எடுக்கலாம் என சில டிப்ஸ் மற்றும் சில புதிய ஸ்டாக் இமேஜஸ்(புகைப்படங்களை வாங்க விற்க உதவும் தளங்கள்) பற்றிப் பார்போம்.
ஆரம்பத்தில் எந்த மாதிரியான படங்களை எடுக்கலாம் என சந்தேகங்கள் வரலாம்.
இந்த சந்தேகங்களைப் போக்கவும், தெளிவான கருத்தை பெறவும், நீங்கள் உறுப்பினராக(புகைப்படங்களை விற்க்கும்) இருக்கும் தளத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கவும்.
பெதுவாக படங்களை வெவ்வேறு தலைப்புகளில் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு, மலர்கள், மரங்கள், இயற்கைக் காட்சிகள், மனிதர்கள், வடிவங்கள், உணவு, உடை, விளையாட்டு உணர்வுகள் என பல உண்டு.
அடுத்தது எது மாதிரியான படங்கள் அதிகமாக விற்கின்றன எனப் பார்க்கவும். இது மாதிரியான படங்களை நீங்களும் எடுக்கலாம். இதேப் போன்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. வித்தியாசமான திறமையான படங்களுக்கு என்றைக்குமே வரவேற்ப்பு உண்டு.
உங்கள் படங்கள் விற்க்கப் படும் போது எப்படி உங்களுக்கு கமிசன் கிடைக்குமோ அதேப் போன்று, நீங்கள் யாரையாவது ரேப்பர்(refer) செய்து, அவர்கள் போட்டோ வாங்கினாலோ உங்களுக்கு காசுக் கிடைக்கும். இதேப்படி ஆகும்? நீங்கள் சைனப் செய்யும் போது உங்களுக்கேன ஒரு அப்லியேட் யு.ஆர்.எல்(affiliate URL) வழங்கப்படும். அதை உங்கள் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் ஓர் வாய்ப்பு: மற்றவர்களை இதே மாதிரி சேர்த்து விடலாம். அவர்கள் படங்கள் விற்க்கப் படும் போது உங்களுக்கு குறிப்பிட்ட கமிசன் கிடைக்கும். எனவே கீழ்க்கானும் புகைப்படங்களை விற்கும் தளங்களில் சேரவும். பொருள் இட்டவும்! வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment