ஒரு சிறந்த, இணையப்பயனாளர்கள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய, வாசிதது ரசிக்கிற பிலாகை உண்டாக்கி விட்டீர்கள். நீங்கள் எழுதிய அந்த பிலாகில் A to Z அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. இப்பொழுது நீங்கள் எழுதிய பிலாகிற்கு மற்றவர்கள் வந்து வாசிக்க வேண்டும். இதையே Traffic என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
உலகின் தலைசிறந்த இணையப்பக்கமாக இருந்தாலும் அதற்கு மக்கள் வரத்து இல்லையென்றால் அந்த இணையதளம் வீணே!
ஏனெனில், மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் இணையதளத்தை (பிலாகும், இணையதளம் போன்றது தான்!) பயன்படுத்த இயலும். பயன்பாடு இருந்தால் தான் உங்களுக்கு பணம் வரும்.
இணையதளத்திற்கு டிராப்பிக்கை, இவ்வாறு ஒப்பிடலாம். நான் ஒரு மளிகைக்கடை ஒன்றை புதிதாக தொடங்குகிறேன். சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற மளிகைக் கடைப்போன்று இல்லாமல், பொருட்கள் தரமானதாகவும், சரியான அளவிலும், வாடிக்கையாளரை நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து நியாயமான விலையில் இருக்கும் படி அமைத்து விட்டேன். இப்படி நான் ஏற்பாடு செய்திருந்தும், வாடிக்கையாளர் என் கடைக்கு வரவில்லை.
ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் மிகமிக எளிது. எனது கடையைப் பற்றி நான் விளம்பரம் செய்யவில்லை என்பது தான்! விளம்பரம் என்பதை மிகவும் தெளிவாக கூற வேண்டுமானால், மற்றவர்களுக்கு உங்கள் பொருட்களை, கூறுவது தான். கடைக்கு விளம்பரம் கொடுத்து மக்களை கடைக்கு வரவழைத்து, அவர்களை கவரும் படி கடை வியாபாரம் அமைந்தால், பின்பு அவர்கள் வாடிக்கையாக கடைக்கு வரச்செய்து வாடிக்கையாளர்களாக பெறமுடியும். இதிலிருந்து ஒன்று புரியும். உங்கள் கடைக்கு மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே, பணம் கிடைக்கும். இந்த கருத்து இணையதளத்தை வைத்து வியாபாரம் செய்வதற்கும், அப்படியே பொருந்தும்! எனவே சில அப்ளியேட் ப்ரோகிராம்களில் சேர்ந்து, அப்ளியேட் URL ஐ உங்கள் பிலாகுகளில் சேர்த்தால் மட்டும் போதாது. உங்கள் இணைய தளத்திற்கோ, பிலாகிற்கு, மக்கள் வரத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், பிலாகும், ஒரு இணையதளத்திற்கு சமம். மக்கள் வரத்தை (Traffic) ஏற்படுத்த இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று, சிறிது பணம் செலவழித்து பெறலாம். இரண்டாவது வழி முற்றிலும் இலவசமானது.
இலவசமாக ஏனோ கிடைப்பதால், இதைப் பயன்படுத்தினால் பயன் இன்றும் கிடைக்காது என்று நினைத்து விடாதீர்கள். பணம் செலவழித்து மக்கள் வரத்தை பெறுவதைப் பற்றி பின்பு கூறுகிறேன்.
இப்பொழுது இலவசமாக மக்கள் வரத்தை தரக்கூடிய சிறப்பு அம்சங்கள் உடைய வெப்தளங்களைப் பற்றி பார்ப்போம்.
உங்களுக்கு Jack pot! (பண மழை) அடிக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்-ஐ(affiliate URL) இந்த தளங்களில் தரலாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்.யிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். அவர்கள் அந்த இணையத்தளத்தில் வாங்கினால், பணம் உங்கள் பாக்கெட்டிற்கு வரும். நீங்கள் வேறெதும் செய்ய வேண்டாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல். ஐ இங்கு தரவும், பணம் தானாக வரும்.
Instant Buzz
உங்கள் இணையதள யு.ஆர்.ல்-ஐ தந்த சில நிமிடங்களில் உங்கள் இணையதளத்திற்கு அலைக்கடல்லென மக்கள் வரத்து இருக்கும். Instant buzz என்று பெயருக்கு ஏற்ப, உடனடியாக, உங்கள் வெப்தளத்தைப் பற்றி செய்தியை புரளி போன்று பரவ செய்து விடும். இலவச மக்கள் வரத்து சேவையைத் தரும் வெப்தளங்களில் முதன்மையானது. இவர்கள் தளத்தில் சென்று toll bar ஐ download செய்து கொள்ளவும். பின்பு எப்போதும் போல பிரவுஸ் செய்யவும். உங்கள் தளத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க பாயிண்ட்ஸ் தேவை. நீங்கள் பார்வையிடும் எந்த தளத்திற்கும் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.
Traffic swarm
தேனீக்கள் கூட்டம் போல மக்கள் வரத்து கிடைக்கும். இன்டர்நெட்டில் பிரபல மக்கள்வரத்தை தரும் சேவையைத் தருகிறது. பத்து URL வரை சேர்க்கலாம். மற்றவர்கள் வெப்சைட்டை பார்வையிட்டால் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
Link referral
ஒரு account ஐ தொடங்கி, உங்கள் வெப்தளத்தை தரவும். உங்கள் வெப்தளத்திற்க வேறு வெப் தளங்களில் இருந்து இணைப்புகள் கிடைக்கும். மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் இணையதளத்திற்கு இணைப்பு (link) கிடைத்தால், தேடு பொறிகளில் உங்கள் வெப்சைட்டின் மதிப்பு கூடி, அவைகளில் இருந்து மக்கள் வரத்து கிடைக்கும்.
Free viral
நுண்கிருமிகளான வைரஸ், பாக்டீரியாக்கள் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கில் பெருகுகின்றன. அதே போல் உங்கள் வெப்சைட்டிற்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான மக்களை கொண்டு வர செய்ய முடியும். இது முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இலவச சேவையாகும்.
2 comments:
அன்பு நண்பரே,
TRAFFICSWARM என்னுடைய தளத்தை மறுத்து விட்டதே!
"TrafficSwarm is currently accepting only sites with content
that is primarily in English, as the overwhelming majority of
our users are English-speaking. We are working on ways
to drive traffic to Non-English sites - so stay tuned."
இப்போது என்ன செய்வது?
Hi welcome to my blog ஞானவெட்டியான்! Thank you for your Interest!
I've mentioned websites accepting, both blogs written in Tamil and english. But some may not accept tamil websites. In that case you can use them to promote your websites written in English.
Post a Comment