5.10.06

பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி? How to make money with blogs?

அனுவைப்பிளந்து சக்தியை பயன்படுத்தும் இந்த நவீன காலத்தில், பிலாகுகளை நவீன வியாபார கருவியாக பயன்படுத்தி இணையத்தில் பொருட்களை விற்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. எனவே அப்படிப்பட்ட பிலாகுகளை எப்படி வாடிக்கையாளர்களை கவரும்படி அமைத்து பணம் பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.

1. மக்கள் வாசிக்க விரும்புகின்றவைகளைப் பற்றி எழுதுங்கள் மக்களுக்குத் தேவையான, மக்கள் வாசிக்க விரும்புகிற காரியங்களைப் பற்றி உங்கள் பிலாகுகளில் எழுத வேண்டும். என்னதான் நல்ல பொருளுடைய பிலாகை நீங்கள் எழுதியிருந்தாலும் அவை இணையப்பயனாளர்கள் வாசிக்க விரும்புகிறவைகளாக இருந்தால்தான், உங்கள் பிலாகை அடிக்கடி விசிட் செய்வார்கள்.

2. தேடு பொறிகளின் தேடு முடிவுகளில் உங்கள் வெப்சைட்டை இடம் பெறச் செய்தல் ஒரு வெப்சைட்டிற்கு அதிகபட்ச மக்கள் வரத்தை அள்ளி தருவது தேடுபொறிகளால்தான். தேடுபொறி தேடுமுடிவுகளில் உங்கள் வெப்சைட் அல்லது பிலாகை இடம்பெறச் செய்வதால், கூடுதல் மக்கள் வரத்தைப் பெறலாம். தேடு முடிவுகளில் உங்கள் பிலாக் இடம் பெறச் செய்ய வைக்க இதோ எளிய டிப்ஸ்.

முதலில் தேடுபொறிகள் எந்த அடிப்படையில் வெப்சைட்டுகளை தேடுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.எடுத்துக்காட்டிற்கு இணையப்பயனாளர் ஒருவர் tamil news என்று டைப் செய்து, இணையத்தில் உள்ள தமிழ் செய்தித்தளங்களைப் பற்றி அறிய விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் டைப் செய்து, தேடு பொத்தானை அழுத்தியதும், தேடுபொறி என்ன செய்யும் தெரியுமா? மொத்த இணைத்தில் உள்ள இணையத்தளங்களில் “tamil news” என்ற சொற்கள் எங்கெங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து தனது தேடு முடிவுகளில் தரும். எனவே தேடுபொறிகள் ஒரு வெப்சைட்டைப் பற்றி அறிய, அந்த வெப்சைட்டில் உள்ள “Keywords” ஐ பயன்படுத்துகின்றன. இப்பொழுது தமிழ் செய்திகளை பற்றி தரும் இணையப்பக்கங்களுள் உங்கள் வெப்சைட்டும் சேர வேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் கண்டிப்பாக “tamil news” என்ற “Keyword” சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். தேடுபொறி தேடு முடிவுகளில் உங்கள் வெப்சைட் இடம்பிடிக்க செய்ய வேண்டுமானால் கீழே தரப்பட்டிருக்கும் எளிய வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் “keyword” உங்கள் இணையதள முகவரியில் இடம் பெற்றிருக்குமாறு செய்து விடுங்கள். உணவுக்கட்டுப்பாடு (dieting) என்ற அடிப்படை keyword பயன்படுத்த நினைத்தால், உங்கள் இணையதள முகவரியை https://dieting.blogspot.com என்று மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் அடிப்படை keyword ஐ உங்கள் பிளாக்கின் தலைப்பில் பயன்படுத்தவும். அடிப்படை கீவேர்டைத்தவிர்த்து இரண்டாம் தர keyword ஐ உங்கள் பிலாக்கின் செய்தி பகுதியில் பயன்படுத்தலாம்.

3. பிலாக் பெட்டகங்களுக்கு சமர்பித்தல் பிலாக்குகளை உருவாக்கி அவற்றை வெளியிட்டால் மட்டும் போதாது அவற்றை பிலாக் பெட்டகங்கள் என்றழைக்கப்படுகிற blog directories க்கு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கூடுதலாக அங்கிருந்தும் உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்தை பெற இயலும்.

4. பிலாக் இணைப்பகங்கள் உங்கள் பிலாக்கை அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டும். அப்படி அப்டேட் செய்யப்பட்டவுடன், மற்ற பிலாக் பெட்டகங்களுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். உங்கள் பிலாக் அந்த அளவிற்கு அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறதோ, அந்த அளவிற்கு தான், உங்கள் பிலாக்கின் மதிப்பின் இருக்கும்.சரி, நீங்கள் அப்டேட் செய்த செய்தியை ஒவ்வொரு பிலாக் பெட்டகங்களுக்கும் சென்று கூற முடியாது. ஆனால் பிலாக் இணைப்பகங்கள் பயன்படுத்தி ஒரே இடத்தில் இருந்தவாறு, அவை அனைத்திற்கும் அப்டேட் செய்தியை அறிவிக்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு:
Ping 0 matic
Link referral
Ping goat

5. இணையத்தொடர்மற்ற வெப்சைட் அல்லது பிலாகுகளில் இருந்து எத்தனை இணைப்புகள் (Links) உங்கள் பிலாகிற்கு கிடைத்து இருக்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இணைப்புகள் மூலம் உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். மற்ற வெப்சைட்டுகள் மற்றும் பிலாகுகளில் இருந்து இணைப்பை பெறுவதற்கான சிறந்த வழிகள்: (1) உங்கள் பிலாக்கைப் போன்ற பிற பிலாகுகளில் சென்று comments ஐ சொல்லாம்.
(2) மற்ற பிலாகுகளுக்கு உங்கள் பிலாகுகளில் இணைப்பு ஏற்படுத்தவும் அவர்கள் உங்களுக்கு இணைப்பு தருவார்கள்.

6. உங்கள் பிலாகுகளை சுற்றி ஒரு எதிர்பார்ப்பு அல்லது புரளியை ஏற்படுத்துதல் புரளி, காட்டுத் தீ போன்று பரவும் அல்லவா? உங்கள் பிலாகுகளைப் பயன்படுத்தி புரளியை ஏற்படுத்த கூறவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பிலாகுகளில் புதிதாக, இன்னும் வெளிவராத செய்திகளை கூறும்போது உங்கள் பிலாகுகளைப் பற்றி செய்தி புரளி போல பரவி, மக்கள் வரத்தை பெறலாம்.இப்போதைக்கு மேற்கூறிய ஆறு வழிமுறைகளையும் செயல்படுத்த தொடங்குங்கள். உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்தை பெறுங்கள்!உங்கள் முயற்சியில் முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். எனது ப்ளாக் பதிவில் மெட்டா டேக்குகளை பயன்படுத்தி தேடுபொறி தேடுதல் முடிவுகளில் இடம் பெறுவதை பற்றி பார்ப்போம்.

5 comments:

அறிஞர். அ said...

Your content is worth.

I suggest you to change ur template. and give good formating.

Personal Webmate said...

Hi welcome மாஹிர் to my blog!Thank you மாஹிர் for the comment. I'm currently working on it.

Anonymous said...

¯ý¦É¡¼ ô¦Ä¡ì À¡÷ò¦¾ý. ¦Ã¡õÀ ¯À¦Â¡¸Á¡¸ þÕó¾Ð. ¿ýâ, „¢Å¡,

Anonymous said...

நான் புதியதாக ஒரு ப்ளாக் தொடங்கியிருக்கிறேன், ஒரு நாள் ஆன பின்பும் எந்த சொல் கொடுத்து தேடினாலும் என்னுடைய ப்ளாக்கை தேடுபொறி காட்டுவதில்லை. என்ன செய்வது, தயவு செய்து சொல்கிறீர்களா? என்னுடைய ப்ளாக் sivaakumaritnews.blogspot.com

rdy said...

your blogs are very useful. thanks
give me a link from u r blog