சரி, இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். எப்படி இந்த தேடுபொறிகள் ஒரு வெப் பக்கத்திலிருக்கும் செய்திகளை சேகரித்து, அவைகளை வகைப்படுத்துகின்றன.இந்த கேள்விக்கு விளக்கத்தை காணும் முன்பு, ஒரு முக்கிய காரியத்தைப் பற்றி பார்ப்போம்.
முன்பு உள்ள வெளியிடுகளில் (Post) மக்கள் வரத்து என்றால் என்ன? உங்கள் இணையத்தளத்திற்கு அதை எப்படி பெறுவது என கூறியிருந்தேன். மக்கள் உங்கள் இணையத்தளத்தை பயன்படுத்த வேண்டுவதற்கே மக்கள்வரத்து தேவை. பயன்பாடு இருந்தாலே பணம். இதை ஆழமாக மனதில் பதித்து கொள்ளுங்கள்.மக்கள் வரத்தை பெறுவதற்கு பல வழிகள் உண்டு. அவைகளைப் பற்றி சுருக்கமாக முன்பு பார்த்தோம். தேடு பொறிகள் மூலம் மக்கள்வரத்தை (Search Engine Traffic) பெறுவது என்பது சிறந்த Idea! ஏனென்றால், தேடு பொறிகள் தரும் வரத்து, மிகவும் சரியான மக்கள்வரத்தை (highly targeted traffic) தரும் என்பதே! இதை விட சிறப்பம்சம் இது முற்றிலும் இலவசம். சிறந்த மக்கள்வரத்தை தரும், அதே சமயம் இலவசமாக கிடைக்கும் வசதியை உங்கள் பக்கம் வளைக்க வேண்டாமா? எனவே, இப்போதே இதற்கான வழிமுறைகளை செயல்படுத்த களத்தில் இறங்கத்தயாரகுங்கள்!இணையப்பக்கங்களில் இருந்து செய்திகளை திரட்டி அதை தேடுபொறிகளுக்கு அளிப்பது மெட்டா டேகுகள் தான். தேடுபொறிகள் உங்கள் இணையதளம் எதைப்பற்றியது என்பதை இந்த மெட்டாடேகுகளைகளில் இருந்து எடுத்துக்கொள்ளும். எனவே தேடு பொறிகளின் தேடுமுடிவுகளில் (search results) உங்கள் இணையதளம் இடம் பெற்றிருக்க உங்கள் மெட்டாடேகுகளை சீராக அமைந்திருக்க வேண்டும்.முதலில் இந்த மெட்ட டேகுகள் என்ன என்பதைப் பார்ப்போம். Meta என்ற வார்தை Meta Data என்ற வார்த்தையினால் இருந்து வந்தது. Meta data என்பதற்கு எல்லாவற்றையும் பற்றி செய்தி உள்ளடக்கிய செய்திப்பெட்டகம் என பொருள்படும்.
இப்பொது மெட்டா டேகின் அமைப்பு விதிமுறைகளை பார்ப்போம் ‘Meta Tag ’ என்பது எச்டிஎம்எல்லி டேகினுள் பயன்படுத்த வேண்டும். மெட்டா டேகிற்கு முடிவு டேக் அமைத்து தேவையில்லை.
Meta tag யின் தோற்றம்
இதில் இரண்டு முக்கிய எலிமண்ட் (elements) உள்ளது.ஒன்று, name மற்றொன்று content என்பது என்ன மாதிரியான (வகையான அல்லது “எதற்காக?”) meta tag என்பதை குறிக்கும். NAME யிற்கு பின்பு வரும் ‘=’ சிம்பளை தொடர்ந்து, double quotation னிற்குள் வருவதுதான், அது என்ன META TAG என்பதை குறிக்கும். எடுத்து காட்டிற்கு மேல் உள்ள டேகில், இவ்வாறாக எளிதாக அமைக்கப்படக்கூடிய meta tag குகளால், தேடுபொறிகளுக்கு உங்கள் வெப்சைட்டிற்கு தெளிவான தகவல் கிடைக்கும். சரி, இனி ‘Description’ மற்றும் 'keyword' ஐ பற்றி பார்ப்போம்.
Description: தேடுபொறிகள் டிஸ்கிரிப்ஷனில் உள்ளவற்றையே அப்படியே, தனது தேடு முடிவுகளில் பட்டியலிடும். எனவே டிஸ்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், உங்கள் வெப்சைட்டில் உள்ள முதல் சில வரிகளை பட்டியலிடும். எனவே டிஸ்கிரிப்ஷன் டேகை பயன்படுத்தி, மிகவும் முக்கியமான தகவலை content பகுதி தரவும்.
Keywords: தேடுபொறிகள் கீவேர்டுகளை மையமாக வைத்தே தேடுகின்றன என்று முன்பு பார்த்தோம். எடுத்துகாட்டிற்கு டயட்டிங் (dieting) பற்றி உங்கள் வெப்சைட் இருக்குமே ஆனால், healthy diet, diet to reduce your weight போன்ற கீவேர்டுகளைப் பயன்படுத்தலாம். எந்த மாதிரியான கீவேர்டுகளை பயன்படுத்தலாம், எந்தெந்த கீவேர்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய Google suggest என்ற சேவையை பயன்படுத்தலாம். இது மிகமிக பயனுள்ள தளம்.இன்னும் சில மெட்டா டேகுகளையும் உங்கள் வெப்சைட்டில் பயன்படுத்தலாம். ஆனால் அவை மக்கள்வரத்தை பெற்று தருவதில்லை.
அவை:
1. Refresh - வெப்பேஜை refresh செய்ய உதவுகிறது
2. Copy right - காப்புரிமை பற்றி தகவல்களை தருவது
3.Author - ஆசிரியரைப்பற்றி தகவல்களை தருவது.
நீங்கள் கடைசியாக செய்ய வேண்டியது மேலே கூறியுள்ள விதிமுறைகளை கடைபிடித்து, மெட்டா டேகுகளுடன், தேடுபொறிகளுக்கு, உங்கள் வெப்சைட்டை சமர்பிக்கவும். தேடுபொறி, சிலந்திகள் உங்கள் வெப்சைட்டை விசிட் செய்து, தகவல்களை சேகரித்து, தனது தேடுபொறி முடிவுகளில் உங்கள் வெப்சைட்டை இடம்பெற செய்ய சிறிது காலம் ஆகும்.மெட்டா டேகுகளின்றி உங்கள் வெப்சைட்டுகளை தேடுபொறிகளுக்கு சமாப்பிக்காதீர்கள்.
துணுக்கு மூட்டை
கூகிள் தேடுபொறியில் Meta tags என்று டைப் செய்து தேடிப்பார்த்தால், வரும் உடனடி தேடுமுடிவுகளில், ‘மெட்டா டேகுகள் செத்துப்போய் விட்டன’ என திடீரென வந்து நிற்கும். ஒவ்வொரு தேடுபொறியும், ஒவ்வொரு மாதிரியான தேடு வழிகளைப் பின்பற்றுகின்றன. கூகிள் met tag குகளை தேடிப்பார்ப்பதில்லை. எனவே கூகிள் தேடுபொறி meta tag ஐ பயன்படுத்தாவிட்டால், அவை வீண் என்று நினைத்து விடாதீர்கள்.
Click here to find what Digital Inspiration says. Here is the screen shoot of the page.
இன்னும் எத்தனையோ முக்கிய தேடுபொறிகள், மேட்டா டெகுகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றுள் சில :
இன்னும் எத்தனையோ முக்கிய தேடுபொறிகள், மேட்டா டெகுகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றுள் சில :
1. அல்டாவிஸ்டா
2. டையரைக்ட் ஹிட்
3. எக்ஸ்ஐட்
என்ன மெட்டா டேகுகளைப்பற்றி அறிந்து கொண்டீர்களா? ஒரு செடியை நட்டு அதைச்சுற்றி கொத்தி உரமிடுவோம் அல்லவா? அதே போன்று ஒரு வெப்சைட்டையோ, பிலாகையோ உண்டாக்கி அதில் மெட்டா டேகை பயன்படுத்தி அதை செம்மையாக அமைத்தால் தேடுபொறிகளில் இருந்து ‘ஒகோ’ என மக்கள்வரத்து இருக்கும்.எனது அடுத்த போஸ்டில், பிலாக் வேட்டைக்கு தயாராக இருங்கள்.
3 comments:
nice job friends. Keep it up.
You should try moderating comment then your site will be in Tamilmanam for more time.
நல்ல பதிவு!
Post a Comment