17.4.08

ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பது? How to insert ads in posts?

அன்பர் ஒருவர் ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பதென்று கேட்டிருந்தார்.

முதலில் இணையப்பக்கங்களை உருவாக்கும் எச்.டி.எம்.எல் என்ற (HTML - Hyper Text Markup Language) மொழியை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். சில அடிப்படை விசயங்கள் தெரிந்திருந்தால் போதுமானது. விளம்பரத்தை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று, எழுத்து வகை, மற்றோன்று பட வகை விளம்பரம். இந்ந விளம்பரத்தை உருவாக்க பயன்படுத்தப் படும் எச்.டி.எம்.எல் டேகுகளைப் பற்றிப் பார்ப்போம்.

எழுத்து வகை விளம்பரம்.

இந்த வகை விளம்பரங்களை உருவாக்குவதற்கு அன்கர் டேக் (Anchor tag) பயன்படுத்தப்படுகிறது. இங்கே, வேறு ஒரு பக்கத்திற்கு இனைப்பை (link) ஏற்படுத்துகிறீர்கள். உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும் போது விளம்பரதாரர் பக்கம் காட்டப்படும் அவ்வளவு தான்! இந்த டேகின் வடிவம் இதுதான்.
முதலில் நோட்பேடை திறந்து வைத்துக் கொள்ளவும். அதில் மேலே உள்ளது போல டைப் செய்துக் கொள்ளவும். அடைப்பு குறிகளுக்குள் இருக்கும் URL of the website என்னும் வாக்கியத்தை நீக்கிவிட்டு, உங்களுடைய அப்பிலியேட் யு.ஆர்.எல்லை பேஸ்ட் செய்யவும். Your text goes here என்பதற்கு பதிலாக, எதற்க்காக லிங்கை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடலாம்.
இங்கு நாம் வாடிக்கையாளர்களை விளம்பரதாரர் பக்கத்திற்கு இட்டு செல்லப் போகிறோம். எனவே குறிச் சொற்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு நிங்கள் புத்தகங்களை விற்கும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுத்தால், ‘சிறந்த புத்தகங்கள் இங்கே கிடைக்கும்’ என பயன்படுத்தலாம் கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.


மேல் உள்ள எ.ச்.டி.யமல் ப்ளாக்கர் போஸ்டில் ஒட்டவும்.
இதேல்லாம் எனக்கு கஷ்டமாக தெரிகிறேதே என நினைத்தால், இதோ எளிய முறை ஒன்று உள்ளது. வலைப்பதிவில் தேவையான இடத்தில், இணைப்பை எற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள சொல்லையோ அல்லது சொற்றோடரை தேர்வு செய்யவும். பின்பு ப்ளாக்கர் போஸ்ட் பேனலில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

பின்பு வரும் வின்டோவில் யு.ஆர்.ல் டெக்ஸ்ட் பாக்ஸில் URL லை பேஸ்ட் செய்யவும். ஓ.கே பொத்தானை அழுத்தவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.


எச்.டி.எம்.எல் பற்றி மேலும் அறிய, எச்.டி.எம்.எல் மொழி இலக்கணத்தை வகுக்கும் W3School இடமிருந்து இலவசமாக கற்றுக் கொள்ளலாம்.

3 comments:

wellwisher said...

Hello john,I am new to ur blog.I wanted to open the blog,after ur teaching,now i have created one blog.All ur informations are very useful.Best of luck.I am expecting more such a useful tips from u.Bye

wellwisher said...
This comment has been removed by a blog administrator.
கல்யாண்குமார் said...

mmm pls tell me that